மனிதம்

மனிதம் 
நிலமே நடுங்கி புரண்டாலும் நடுங்கி நிற்காது மனிதம்
கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம்
அன்பென்பது இன்பத்தின் வேர்
ஆசையே துன்பத்தின் வேர்
காமமே காதலின் வேர்
காதலே மனிதத்தின் வேர்
மலரும் ஒவ்வொரு பூவும் பூமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சாமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது
மனித உறவுகளுக்கெல்லாம் ஆதாரமானது ஆதாமின் உடலுறவு
மனித துயரங்களுக்கெல்லாம் ஆரம்பமானது ஆதாமின் உடலுறவு
கவிதையும் காதலும் இளமையோடு உதிர்ந்து விடுகிறது
கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை
அலைகளின் மீது ஙரை போல ஆடிக்கொண்டிருக்கிருக்கும் உலகம்
ஆசைகளின் மீது அலை போல வாடிக்கொண்டிருக்கும் மனிதம்
நல்லவர் இறக்கும் போது ஆன்மா விடுதலையடைகிறது
தீயவர் இறக்கும் போது உலகம் விடுதலையடைகிறது
வளமை என்பதை மனித முன்னேற்றத்தின் சாட்சி என சொல்கிறார்
வறுமை என்பதை எந்த முன்னேற்றத்தின் சாட்சி என சொல்லுவார்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஜனவரி 2 2022

சமூகம்