மனிதம்
| மனிதம் |
| நிலமே நடுங்கி புரண்டாலும் நடுங்கி நிற்காது மனிதம் |
| கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம் |
| அன்பென்பது இன்பத்தின் வேர் |
| ஆசையே துன்பத்தின் வேர் |
| காமமே காதலின் வேர் |
| காதலே மனிதத்தின் வேர் |
| மலரும் ஒவ்வொரு பூவும் பூமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது |
| பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சாமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது |
| மனித உறவுகளுக்கெல்லாம் ஆதாரமானது ஆதாமின் உடலுறவு |
| மனித துயரங்களுக்கெல்லாம் ஆரம்பமானது ஆதாமின் உடலுறவு |
| கவிதையும் காதலும் இளமையோடு உதிர்ந்து விடுகிறது |
| கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை |
| அலைகளின் மீது ஙரை போல ஆடிக்கொண்டிருக்கிருக்கும் உலகம் |
| ஆசைகளின் மீது அலை போல வாடிக்கொண்டிருக்கும் மனிதம் |
| நல்லவர் இறக்கும் போது ஆன்மா விடுதலையடைகிறது |
| தீயவர் இறக்கும் போது உலகம் விடுதலையடைகிறது |
| வளமை என்பதை மனித முன்னேற்றத்தின் சாட்சி என சொல்கிறார் |
| வறுமை என்பதை எந்த முன்னேற்றத்தின் சாட்சி என சொல்லுவார் |
| Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx |
OK
ReplyDelete